இந்தியா

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக உரிய கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேதிய கொடியை ஏற்றினார். பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இவ்விழாவில் பல்வேறு முக்கிய பிரமுபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன் பள்ளி மாணவர்களுக்கு இவ்வீழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கியமாக கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் 1,500 பேர் “கொரோனா வைரசை வென்ற வெற்றியாளர்கள்” என்ற அடிப்படையில் பங்கேற்று தமது உறுதியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சுதந்திர தினத்தொயொட்டி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு உரையாற்றியிருந்தார். அதில் அவர் இந்தியா அமைதியை விரும்பும் நாடு; ஆனால் நாட்டின் எல்லையை ஆக்கிரமிப்பு முயற்சிச் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமாதிக்காது. அதற்கான பதிலடி கொடுக்கும் சக்தி கொண்டது என கூறினார்.

மேலும் கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்களை பாராட்டுகிறேன், அவர்களில் சிலர் உயிரிழந்தவர்கள் நமது தேசிய கதாநாயகர்கள் எனவும் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தேசிய நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தேசிய போர் நினைவிடம் என்பது பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டு இந்தியா கேட் வளாகத்தில் தொடங்கிவைத்தார். இங்கே அமைந்துள்ள நினைவு சின்னத்தில் அமர் சக்ரா, வீர்தா சக்ரா, தியாக் சக்ரா, ரக்‌ஷக் சக்ரா என நான்கு சக்கரங்கள் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கான தமது உரையில் பல்வேறு அம்சங்களை தெரிவித்து வருகிறார், அதில் முக்கியமாக கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் ஏற்கனவே 3 வீதமான தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை  டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், அகமது பட்டேல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

நாட்டில் சுதந்திர தின விழாவைவொட்டி இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் இந்திய - திபெத் எல்லை காவல் படையினர் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடியுள்ளனர். இந்த பாதுகாப்பு வீரர்கள் தரை மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடதக்கது, இதேவேளை இந்தியாவின் மற்றுமொரு எல்லைப்பகுதியான அமிர்தசரஸில் உள்ள அட்டாரி - வாகா எல்லையிலும் சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.

நாட்டின் சுதந்திர தின விழாவையொட்டி தமிழகத்தில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசு சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். முதலில் கோட்டை கொத்தளத்தின் முன்பாக அணிவகுப்பு மரியாதை நிகழ்ந்தது. அதனைத்தொடர்ந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றினார்.

அதன்பின்னர் தமிழக அரசு சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு விருதுகளை முதல் அமைச்சர் வழங்கினார். இதில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, முதல்வரின் சிறப்பு விருது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவைக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதேவேளை சென்னை கோட்டையில் நடைபெற்றுவரும் சுதந்திர தின விழாக்கொண்டாட்டங்களில் மூத்த குடிமக்கள், பள்ளிமாணவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை நேரில் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் தொலைக்காட்சி வாயிலாக காண கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். மேலும் அசாதாரண சூழலால் சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கான மரியாதையை அவர்களின் வீடுகளுக்கே சென்று சுகாதர வழிமுறையினை கடைப்பிடித்து வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.