இந்தியா

பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகையான ஸ்ராவணி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழ், மற்றும் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ராவணி கடந்த எட்டு ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர நாயகியாக நடித்த மௌனராகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் நடித்துவந்த ‘மனசு மம்தா’என்ற தெலுங்கு சீரியல் கவனிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஸ்ராவணி நேற்று இரவு ஹைதராபாத்தின் மதுரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதை ஹைதராபாத் காவல்துறை ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தேவ்ராஜ் ரெட்டி என்பவரின் துன்புறுத்தல் காரணமாக ஸ்ராவணி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேவராஜ் துன்புறுத்தலால் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படும் ஸ்ராவணி வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா என்ற அடிப்படையில் காவல்துறை விசாரித்து வருகிறது. என்றாலும் ஸ்ராவணியின் குடும்ப உறுப்பினர்கள் தேவ்ராஜ் ரெட்டி மீது எப்சர்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.