இந்தியா

இந்திய டெலிகாம் துறையில் பல நிறுவங்கள் மூடப்பட காரணமவும்,  முன்னனி வகித்துவருவதுமான தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ.

அதன் தலைவர் முகேஷ் அம்பானி ‘மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கூகுள் நிறுவனம் வழங்க இருப்பதாகவும் இதற்காக இரு தரப்புக்கும் இடையில் தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும்’ கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார். இந்த ஒப்பந்தத்தையடுத்து கூகுள் நிறுவனம் 4.5 பில்லியன் டாலர்களை ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதாகக் கூறப்பட்டது.

இதன் எதிரொலியாக வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தையிலேயே மிகக் குறைந்த10 கோடி ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாகவும், அறிமுக சலுகையாக ஜியோ ஸ்மார்ட் போன்களை வாங்கும் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இலவச 4ஜி இணைய சேவை வழங்கப்பட இருப்பதாகவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.