இந்தியா

எதிர்வரும் 14ந் திகதி தமிழக சட்டசபை மீண்டும் கூடவுள்ளது. தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக,கலைவாணர் அரங்கில் கூடுகிறது.

சென்னை ஜார்ஜ் கோட்டையிலுள்ள தமிழக சட்டசபை மண்டபத்தில் கூடாமல், உறுப்பினர்களுக்கு இடையிலான போதிய இடைவெளிகளுடன் நடத்துவதற்காக , கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில், சட்டசபையை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கலைவாணர் அரங்கத்தில் வரும் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிய வருகிறது.

கொரோனா வைரஜ் தொற்றுப் பாதுகாப்பு விதிகளுக்கு அமைவாக நடைபெறவுள்ள சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு சென்றுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த வகையில் நேற்றைய தினம், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களின் வீடுகளுக்குச் சென்ற சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளின் முடிவு இன்று வெளியாகியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.