இந்தியா

இந்தியாவில் நீட் தேர்வு தொடர்பான பல்வேறு சிக்கல்கள் எழுந்தபோதும் இன்று நாடு முழுவதும் இத் தேர்வு ஆரம்பமாகியுள்ளது.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக மாணவர்கள் கடும் சோதனைகளுக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் நீட் தேர்வை எழுதிகிறார்கள். தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

முன்னதாக தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே இப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் பலன் இல்லாமல் போனது.

இந்நிலையில் நீட் நுழைவுத்தேர்வு அச்சம் காரணமாக நேற்று 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடதக்கது.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.