இந்தியா

வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் கைது செய்யப்பட்டார்.

பிப்ரவரி 24-26 டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாஃப்ராபாத், ஷாகுர் பஸ்தி, சிவ் விஹார், சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் கொல்லப்பட்டனர், 581 பேர் காயமடைந்தனர்.

இந்த கலவரத்திற்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்திற்கும் தொடர்பு இருப்பதாக டெல்லி சிறப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே கவலரம் குறித்த வழக்கின் துணை குற்றப்பதிரிகையில் டெல்லி போலீசார் சிபிஐஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, சுவராஜ் அபியனின் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பெயர்களை இணைத்துள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் டெல்லி கலவர வழக்கில் துணை குற்றப்பத்திரிகையில் சீதாராம் யெச்சூரி மற்றும் பல அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களை பெயரை சேர்ப்பதன் மூலம் டெல்லி காவல்துறை குற்றவியல் நீதி முறையை கேலிக்குள்ளாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.