இந்தியா

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த வரும் 25ஆம் திகதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு என தகவல் வெளியானது. இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே வரும் செம்டம்பர் 25ஆம் திகதி முதல் 46 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் மத்திய அரசு இச் செய்திகளை நிராகரித்துள்ளது. மேலும் இது ஒரு போலி செய்தி என பத்திரிகை தகவல் பணியகம் எச்சரிக்கையுடன் பதிவிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த செப்டம்பர் 25 முதல் மற்றொரு லாக்டவுனை விதிக்க மத்திய அரசை பரிந்துரைத்ததாக செய்தி ஒன்று பகிரப்பட்டு வைரலானது. இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நாடு தழுவிய ஊரடங்கு மீண்டும் விதிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படும் உத்தரவு போலியானது; அத்தகைய எந்த உத்தரவையும் வெளியிடவில்லை என பிஐபி உண்மை சோதனை டுவிட் பக்கம் மறுத்து பதிவிட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.