இந்தியா

இந்தியாவில் கொரோனா நோயினால் 50 லட்சத்தை கடந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிப்புக்கள் 50 லட்சத்தை கடந்துள்ளது.

இதன் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வீதம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு நாளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,123 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,290 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 50 லட்சத்து 20 ஆயிரத்து 360 பேர் பாதிப்படைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் 9 லட்சத்து 95 ஆயிரத்து 933 பேரும் 39 லட்சத்து 42 ஆயிரத்து 361 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்து 066 பேர் ஆக உள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் நிகழும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 சடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.