இந்தியா

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் மத்திய அரசு சில மண்டலங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களும் மாணவர் நலன் கருதி திறக்கப்படாமல் இருந்து வருகிற போதும் ஆன்லைன் வழி பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே டெல்லியில் கொரோனா பாதிப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி டெல்லியில் உள்ள வரை தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகை மாணவர்களுக்கான பள்ளி கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

எனினும் ஆன்லைன் வழி கல்வி செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.