இந்தியா

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

(செப்டம்பர் 15) ஆனால் உண்மை என்ன? திரு ஷாஹித் ஜமீல் கூறிய 2 முக்கிய அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும்

1 கொரோனா பாதிப்பு இந்தியாவில் வளரும் வேகம்

2 2/3 (மூன்றில் இரண்டு பங்கு)பாதிப்பு கிராமங்களில் உள்ளது

தேதி _ ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பின் சராசரி /

இறப்பின் சாராசரி

செப் 16 - 93200. / 1160
ஜுலை 16 - 27000 /. 540


இரண்டையும் ஒப்பிடும் போது பாதிப்பின் வளர்ச்சி 230% இறப்பின் வளர்ச்சி 115%

ஆக இந்தியாவில் பாதிப்பும்,இறப்பும் அதிகரித்து வருகிறது என்ப…
கொரோனா கட்டுக்குள் உள்ளது- எனும் அரசின் வாதம் சரியா?


இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார் (செப்டம்பர் 15) ஆனால் உண்மை என்ன? திரு ஷாஹித் ஜமீல் கூறிய 2 முக்கிய அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும்

1 கொரோனா பாதிப்பு இந்தியாவில் வளரும் வேகம்

2 2/3 (மூன்றில் இரண்டு பங்கு)பாதிப்பு கிராமங்களில் உள்ளது

தேதி _ ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பின் சராசரி /

இறப்பின் சாராசரி

செப் 16 - 93200. / 1160
ஜுலை 16 - 27000 /. 540


இரண்டையும் ஒப்பிடும் போது பாதிப்பின் வளர்ச்சி 230% இறப்பின் வளர்ச்சி 115%

ஆக இந்தியாவில் பாதிப்பும்,இறப்பும் அதிகரித்து வருகிறது என்பதே உண்மை

ICMR மே- ஜூன் ல் செய்த இரத்த ஆய்வின் முடிவு -

தொற்று ஏற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் 82-130 பேர் தொற்று கண்டறிய படாமல் உள்ளனர் இந்தியாவில் தற்போது பாதிப்பு 5 மில்லியன் என கொண்டால் கண்டறியபடாத நபர்களை கணக்கில் கொள்ளும்போது அது 410-650 மில்லியன் என ஆவது தெளிவாகிறது கொரோனா பாதிப்பில் ஒரு வார வளர்ச்சியின் சராசரி -

இந்தியா 93000 அமெரிக்கா 39000

இதே நிலை தொடர்ந்தால் அக்டோபர் இறுதிக்குள் அமெரிக்காவை விட இந்தியாவில் பாதிப்பு அதிகமாகும்


இந்தியாவில் கொரோனா இறப்பு குறைவாக உள்ளது என நாம் பெருமிதம் அடையலாமா??


இந்தியாவில் கொரோனா இறப்பு குறைவாக உள்ளது என அரசு கூறிவந்தாலும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது அது அதிகமாக இருப்பதை திரு ஷாஹித் ஜமீல் தெளிவுபடுத்துகிறார்


இந்தியா -60
பாக்கிஸ்தான் -29
வங்கதேசம் -29
நேபாளம் -13
இலங்கை -0.6

இறப்பு ( எண்ணிக்கை/ மில்லியன்) செப்டம்பர் 17 நிலவரம் - ( தொலைதூர நாடுகளுடன் ஒப்பிடாமல் அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் இறப்பு அதிகம் என்பதே உண்மை)

ஆக நாம் பெருமிதம் அடையலாமா?


இந்தியாவில் ரஷ்ய கொரோனா தடுப்பூசி?

ரஷ்யா தடுப்பூசி ஆய்வில் 7 ல் ஒருவருக்கு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளது - ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர்

Phase_2 தடுப்பூசி ஆய்வில் வெறும் 40 பேரை வைத்து மட்டும் தடுப்பூசியின் பாதுகாப்பு/திறனை உறுதிபடுத்த முற்பட்டது சரியா?

தடுப்பூசி ஆய்வின் அனைத்து முடிவுகளையும் பொதுவெளியில் வைக்காமல் இருப்பது சரியா?

ஆக முறையான ஆய்வுகளை மேற்கொண்டு , தடுப்பூசியின் பாதுகாப்பு/ திறனை முழுமையாக உறுதிபடுத்திய பின் நடைமுறைக்கு கொண்டு வருவது சிறந்தது அல்லவா?


பிராப்தி - பிரணவி
( உதவி மருத்துவர் வீ புகழேந்தி)

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.