இந்தியா

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை எதிராக எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்ட புத்தகம் கிழித்தமை அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு சம்பவங்கள் அவையில் நடந்திருந்தன. எனினும் மக்களவையில் நேற்று ஒரே நாளில் 7 மசோதாக்கள் நிறைவேறின.

இதனையடுத்து மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் 1 ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர் கால வரையின்றி ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். 10 நாட்களுடன் முடித்துக்கொள்ளப்பட்ட கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்திருந்தார்.

மேலும் இக் கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.