இந்தியா

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இதில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் 7 மாநில முதல் அமைச்சர்களுடன் சிறப்பு கொரோனா ஊரடங்கு தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடத்திவருகிறார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற காணொலி ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள மராட்டியம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் தற்போதைய நிலை, தயார் நிலை மற்றும் கொரோனா மேலாண்மை ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் பின்பு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் இணைந்து கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன். இது நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

இன்னும் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மட்டும் நோய் தீவிரமாக காணப்படுகிறது. எனவே தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

தொலை மருத்துவ துறையில் மத்திய அரசின் ஆயூஷ் சஞ்சீவனி செயலியை தமிழ்நாடு சிறப்பாக பயன்படுத்தி முன்னிலை வகிக்கிறது. இதனால் மற்றைய மாநிலங்களுக்கு இது ஓர் முன்மாதிரியாக மாறும் என்ற நம்பிக்கை இருப்பதாக மேலும் அவர் கூறினார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.