இந்தியா

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

‘பாடும் நிலா பாலு’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இவருக்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. அதன்பிறகு அங்கு அவருக்கு சுவாசக் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரெம்டெசிவர் மருந்து சிகிச்சியும் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடலநிலை முன்னேற்றம் கண்டு வந்த நிலையில் வாய் வழியாகச் சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது. இதனால், திரையுலகினர், ரசிகர்கள் அனைவருமே மகிழ்ச்சியடைந்தார்கள்.

உறவினர்களும் நண்பர்களும் குவிந்தனர்

இதையடுத்து பூரண குணமடைந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் வீடு திரும்புவார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் கோரோனா உடல்நிலை குணமாவதுபோலக் காட்டி அவரை மீண்டும் ஆபத்தில் தள்ளிவிட்டதால் தற்போது தமிழகமே அழுதுகொண்டிருக்கிறது செப்டம்பர் 24-ஆம் தேதியான நேற்று எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததுவிட்டதாகவும் மிக ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பதாகவும்ம் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து ரத்தபந்த உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். கமல் முகக்கவசம் அணிந்து மருத்துவமனைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர். எஸ்.பி.பி ‘ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக’ குறிப்பிட்டார். அதேபோல மருத்துவமனைக்கு வருகை தந்த பாரதிராஜா, “ துக்கத்தில் பேச்சு வராது. இத்தனை கோடிபேர் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கவில்லை” என வேதனையுடன் குறிப்பிட்டார்.

சென்னை வாழ் எஸ்.பி.பி.ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் மருத்துவமனை முன்பு திரண்டு வருவதால் மருத்துவமனையை தமிழக காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. நேற்றிரவே சமூக வலைத்தளங்களில் அவர் மறைந்துவிட்டார் என்பது போன்ற செய்திகளும் அஞ்சலிகளும் பகிரப்பட்டன. ஆயினும் இன்று காலை இந்திய நேரப்படி 11.35 அளவில் அவரது உயிர் அமைதி கொண்டது என அறிய வருகிறது. அவரது மறைவு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை மருத்துவனை நிர்வாகம் பிற்பகல் 1.45 க்கு வெளியிட்டுள்ளது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.