இந்தியா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.


மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. 12000 வருட இந்திய வரலாற்றை எழுதுவதற்கான தகுதியற்றவர்களைக் கொண்டு மத்திய அரசு அமைத்துள்ள குழுவை உடனே கலைக்க வேண்டும். 2. இந்தியாவின் உண்மையான வரலாற்றை முன்வைக்கும் விதமாக இணையவழியில் தொடர் உரையரங்கத்தினை தமுஎகச நடத்துகிறது. ஆய்வுப்புலத்தில் மதிக்கத்தக்க பங்காற்றி வரும் தமிழக, இந்திய வரலாற்றாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். 3.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் அறிவிப்புகள், விண்ணப்பங்கள், ஒப்புகைச்சீட்டுகள் போன்றவற்றில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. தமிழை, தமிழர்களை அவமதிக்கிற இந்த ஏற்கத்தகாத நிலையினால் தமிழக மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலமும் தமிழும் மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும். 4. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தி 53 பேரை கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத டெல்லி போலிசார், இந்த வன்முறைக்கு ஆளானவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் பொய்வழக்கு புனைந்து கைது செய்துவருவது கண்டிக்கத்தக்கது. மாற்றுக்கருத்தாளர்களை ஒடுக்குவதற்கு மத்திய அரசின் உள்துறை மேற்கொண்டுள்ள இந்த ஆள்தூக்கும் போக்கை கைவிடவேண்டும். - மேற்கண்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், பேரா அருணன், கெளரவத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன், துணைத்தலைவர்கள் நன்மாறன், திரைக்கலைஞர் ரோஹினி, நந்தலாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுக்கூர் இராமலிங்கம்
மாநிலத்தலைவர் (பொறுப்பு)

ஆதவன் தீட்சண்யா
பொதுச்செயலாளர்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.