இந்தியா

கடந்த மாதத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேகமெடுத்து வரும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இந்தியாவில் அதிகமாக காணப்பட்டாலும் புதிய தொற்றாலார்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் 100 சதவீதமாக குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்புக்களிலிருந்து 82 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சையில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் 10 லட்சத்திற்கும் குறைவான எண்ணிக்கை என சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஒரே நாளில் மேலும் 70,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 61,45,292 பேர் இதுவரை கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதேபோல் 776 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96,318 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் சங்கம்சுட்டிக்காட்டி உள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் அங்கு கொல்லம் மாவட்டத்தில் சவரா மற்றும் ஆலப்புழாவின் குட்டநாடு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடத்தபடவுள்ளது. இதனையடுத்தே இச்சங்கம் தற்போதைய நிலையில் தேர்தல் நடத்துவது நிலைமை மேலும் மோசமாக்கும் என கூறியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.