இந்தியா

கொரோனா ஊரடங்கில் 5-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது இந்திய அரசு. அதில் திரையரங்குகளை அக்டோபர் 15-ஆம் திகதி முதல் 50 % இருக்கைகளை பார்வையாளர்களைக் கொண்டு நிரப்பி மீண்டும் நடத்தத் தொடங்கலாம், காட்சிகளைத் திரையிடலாம் என்று அறிவித்துள்ளது.

இதன்மூலம் கடந்த 7 மாதங்களாக மூடிக்கிடந்த திரையரங்குகளுக்கு இந்தியாவில் விடிவுகாலம் பிறந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால், கொரோனா நோய் கட்டுக்குள் வந்துள்ளது என நம்பப்படுகிறது. ஆனால், நோய் கட்டுக்குள் இல்லாமல் தற்போது சென்னையில் மட்டுமே நாள் ஒன்றுக்கு 1300 தொற்றுகளைச் சந்தித்து வருகிறது. மாநில அளவில் 5.500 தொற்றுக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் திரையரங்களைத் திறப்பது மேலும் ஆபத்தில் முடியலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திரையரங்குகள் திறப்பு தொடர்பாக, இன்று மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்தது. மேற்கு வங்கத்தில், அக்., 1 முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என, அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நிலைமைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப தளர்வுகளை முதல்வர் அறிவித்து வருகிறார். மத்திய வழிகாட்டி நெறிமுறைகள், மருத்துவ நிபுணர் குழு கருத்துகளை கேட்டறிந்து, விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்புகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.