இந்தியா

இந்திய நாட்டின் 14 மாநிலங்களில் தற்போது 5,000 க்கும் குறைவான நோய்தொற்றாளர்களே சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோவா, இமாச்சலப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், சண்டிகர், புதுச்சேரி, மேகாலயா, நாகாலாந்து, லடாக், சிக்கிம், மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் லட்சத்தீப் ஆகிய மாநிலங்களே அவை எனவும் அடையாளப்படுத்தியுள்ளது. மேலும் வைரஸ் நோய்த்தொற்றின் பரவுதல் சுழற்சியைக் குறைக்க அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63,12,585 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,181 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98,678 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மராட்டியம், கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி, சத்தீஸ்கார், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. இந்தியா முழுவதும் இதுவரை 52,73,202 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், தற்போது இந்தியா முழுவதும் 9,40,705 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, தொற்று பரவலை தடுப்பதற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை மருத்துவ பரிசோதனையில் உள்ள நிலையில், தொற்று பாதித்தவர்களுக்கு, ஏற்கனவே பிற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்துகிற மருந்துகளை சோதனை ரீதியில் அவசரத்துக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அனுமதி தரப்பட்டுள்ள 23 மருந்துகளை டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ந்துள்ளது. இந்த ஆய்வில், கிராம் பாசிட்டிவ் பாக்டீரியாவால் ஏற்படும் தீவிர நோய் தொற்றுகளுக்கு சிகிச்சையில் பயன்படுத்தக்கூடிய ‘டீகோப்ளானின்’ மருந்து, கொரோனா வைரஸ் சிகிச்சையில் நல்லபலனைத் தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர் அசோக் படேல் “கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் லோபினாவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் போன்ற மருந்துகளை விட ‘டீகோப்ளானின்’ இருபது மடங்கு வரை அதிக செயல் திறனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் இன்னும் அதிகளவில் ஆராய்ந்தால்தான், கொரோனாவுக்கு எதிரான இந்த மருந்தின் பங்களிப்பு குறித்த திட்டவட்டமான முடிவுக்கு வர முடியும்” என குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.