இந்தியா

2021 வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளார் யார் ? என்பது தொடர்பில் கடந்த சில தினங்களாக அக்கட்சிக்குள் பெரும் இழுபறிகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

கடந்த சில தினங்களாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். இன்று முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என செயற்குழுக் கூட்டத்தின் பின்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், இந்த ஆலோசனைகள் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை பெரும் பரபரப்பாக இடம்பெற்றன.

இன்று காலை, கட்சித் தலைமையகத்தில் கூடிய தொண்டர்கள் மத்தியில், முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில், அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். இத்துடன் 11பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

“இலங்கை விடயத்தில் நாங்கள் இரட்டை வேடம் போடுபவர்கள் அல்ல.” என்று சீனா தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று புதன்கிழமை இரவு சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.

சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற எதிலிகள் படகு ஒன்று செனகல் நாட்டின் கடற்கரையில் மூழ்கியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.