இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்களுக்கு எதிராக போராட அனைவரும் இணைவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் செய்தியொன்றில், " இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான யுத்தம் மக்கள் சார்ந்தது. இந்த வைரசிலிருந்து நமது மக்களை பாதுகாக்கும் பணியை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,"தொற்றுக்கு எதிராகச் செயற்படும் சுகாதார பணியாளர்களால் மக்கள் பலம் பெறுகின்றனர். நமது கூட்டு முயற்சி பலரது உயிரை காப்பாற்றியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் இணைந்து போராடுவோம் எப்பொழுதும், முக கவசம் அணிவதை, கைகளைக் கழுவி கொள்வதை, சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை, நினைவில் கொள்ளள வேண்டும். ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க; இந்திய மக்கள் தொகை அடிப்படையில் நாளொன்றுக்கு 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வழங்கியிருந்த அறிவுரையின்படி, மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பரிசோதனைகளில் தேசிய அளவில் சராசரியாக நாளொன்றுக்கு 10 லட்சம் பேரில் 865 பேருக்கு என்ற அளவில் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78,524 பேருக்கு புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆயினும் கடந்த 24 மணிநேரத்தில் 83,011 பேர் குணமடைந்தும் சென்றுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் தேசிய மட்டத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 8.19% சரிந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

“இலங்கை விடயத்தில் நாங்கள் இரட்டை வேடம் போடுபவர்கள் அல்ல.” என்று சீனா தெரிவித்துள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.

சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற எதிலிகள் படகு ஒன்று செனகல் நாட்டின் கடற்கரையில் மூழ்கியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.