இந்தியா

கேரளாவில் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் கடற்கரைகள் மட்டும் திறக்கப்படாது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு சுற்றுலாதலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 6மாதங்களுக்கும் மேலாக நீடித்த தடையை அடுத்து தற்போது கேரளாவில் கடற்கரைகளை தவிர அனைத்து சுற்றுலா தலங்களையும் திறப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியதாவது மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலங்கள், சாகச மற்றும் நீர் சுற்றுலா இடங்கள் திங்கள் கிழமை முதல் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றார்,

சுற்றுலாத்துறையை புதுப்பிக்கும் முயற்சியிலே இவ்வாறு சுற்றுலாதலங்களை திறக்க கேரள மாநில அரசு முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே கேரளாவில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை இன்று 9,347 புதிய தொற்றுநோய்களுடன் 2,87,202 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

எனினும் கேரளாவுக்கு வரப்போகும் சுற்றுலாப் பயணிகளுக்கான உரிய வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.