இந்தியா

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, அந்தப் பதவியிலிருந்து, கட்சியால் விலக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து விலகினார்.

கடந்த சில தினங்களாக டுவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டும், உள்துறை மந்திரி அமித்ஷா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்ததும், அ.தி.மு.க. முதல் அமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தது என்பன காங்கிரஸ் கட்சிக்குள் குஷ்பு மீதான கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்த நிலையில், அவர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று வந்த நடிகை குஷ்பு, நேற்று இரவு திடீரென அவசரமாக டெல்லிக்குப் புறப்பட்டார். அவருடன் அவருடைய கணவரும், திரைப்பட இயக்குனருமான சுந்தர்.சி.யும் உடன் சென்றார். டெல்லி சென்ற குஷ்பு இன்று பா.ஜ.க.வில் இணைய இருக்கிறார் என்றும் டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்திக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.