இந்தியா

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பு, நேற்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவரை சந்தித்து தன்னை பா. ஜ. கட்சியில் இணைத்துக் கொண்டார்.

அவரது இந்த திடீர் முடிவிற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் குஷ்பு கருத்துத் தெரிவிக்கையில், நல்ல திட்டங்களை அரசு நிறைவேற்றும்போது ஏன் எதிர்க்க வேண்டும். ஒரு திட்டத்தை எதிர்க்க வேண்டுமென்றால் அதற்கான தீர்வையும் கொடுக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் அதை செய்வதில்லை. கூட்டம் சேர்க்க என்னை அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கு நான் நடிகை என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது நான் வெறும் நடிகையாம். நீங்கள் தலைவர் வேஷம் போட்டு நடிக்கிறீர்களே? அதை என்னவென்று சொல்வது.
காங்கிரஸில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லை. அப்படியென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும் ? எனக் கேட்டார்.

நடிகை குஷ்பு, காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த விவகாரம் இப்போது இணையத்தில் விவாதமாகி இருக்கிறது. கணவர் சுந்தர் சி-யின் வற்புறுத்தலில்தான் பா.ஜ.க.வில் இணைந்தார்என்றும் இணைய வாசிகளால் விவாதிக்கப்படுகிறது. ஆனால், கணவர் உட்பட.. பிறர் தன்னை ஆட்டுவிப்பதை விரும்பாதவர், குஷ்பு. தவிர, சுந்தர் சி-யும் அப்படிப்பட்ட நபர் அல்ல என்கிறார்கள் அவரை நன்கு அறிந்த மூத்த பத்திரிகையாளர்கள். குஷ்புவின் அரசியல், திரைத்துறை குறித்து அவரிடம் பேசி எந்த விசயத்தையும் வாங்க முடியாது. “அவங்க செயல்பாடு குறித்து அவங்ககிட்டயே கேளுங்க..” என்பார். இது திரையுலகில் பத்திரிகை வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். குஷ்புவைப் பொறுத்தவரை, தன்முனைப்பு அதிகம் கொண்டவர். தனக்கான முக்கியத்துவம், எதிர்காலம் காங்கிரஸ் கட்சியில் இல்லை என நினைக்கிறார். இதனால்தான் பாஜகாவில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று அவர் நினைத்திருக்கிறார்.

இதுபற்றி ஒரு நெட்டிசன் தனது பதிவில்‘தற்போது பாஜகவில், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வரிசையில் தனக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என நினைக்கிறார். யார் கண்டது… பா.ஜ.க., தமிழகத்தில் தனித்து அல்லது தனது தலைமையில் தேர்தலில் போட்டியிடும் சூழல் வந்து தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடும் என்றுகூட குஷ்பு நினைத்திருக்கலாம். மற்றபடி இதில் சுந்தர் சி தலையை உருட்டுவது சரியல்ல.’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொரு பதிவர் “நடிகை குஷ்பு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார், மற்றொருவர் ‘பாஜகாவில் குஷ்புவுக்கு நல்ல வேடம் கிடைக்க வாழ்த்துகள்’ என்று கிண்டல் செய்துள்ளார். இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கு ஒரு நெட்டிசன் குஷ்புவை வைத்து இட்லி சுடாத குறைதான். அவர் தனது பதிவில் ‘பாஜகவில் குஷ்பு - ஒரு சர்க்கரை பொங்கல் வடகறி காம்போ. ஆப்பை எடுத்து சொருகி கொள்வது என்பது தமிழக பிஜேபி காரர்களுக்கு பிடித்தமான ஒன்று. இந்த முறை ஆப்பிற்கு பெயர் குஷ்பு. போக போக புரியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.