இந்தியா

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வரும் 15-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது.

இந் நிலையில் கேரளாவில் திரையரங்குகளை திறப்பது குறித்து, கேரள திரைப்பட வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் மாயாயும் பியோக் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் , பிலிம் சேம்பர் ஆகியவற்றின் பிரதி நிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து தியேட்டர்களை திறந்தாலும் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க ரசிகர்கள் வருவார்களா என்பது சந்தேகமே . அப்படியே தனி மனித இடைவெளியுடன் 50 சதவீத பார்வையாளர்களுடன் ஸ்நாக்ஸ் சேல்ஸ் கூட இல்லாமல் நஷ்டத்தில் தியேட்டர்களை இயக்க முடியாது. அரசு சலுகைகளை அறிவித்தால் மட்டுமே தியேட்டர்களை திறப்பது குறித்து ஆலோசிக்க முடியும். தற்போதுள்ள சூழ் நிலையில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு தியேட்டர்களை திறக்கும் எண்ணம் இல்லை என்று சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் சோதனை முயற்சியாக அரசு திரையரங்குகளில் படங்களை திரையிடலாம் என்று கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு சங்க பிரதிநிதிகள் மறுத்து விட்டனர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். இது தொடர்பாக மந்திரி சபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனாலும் இன்னும் ஒரு மாத காலத்திற்கு தியேட்டர்களை திறக்க சாத்தியமில்லை என்று கூறப்படுது. இதுவொருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் திரையரங்குகளை வரும் நவம்பர் மாதத்தில் திறக்க உத்தேசித்து வரும் 21 தேதி அதுபற்றி ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறது தமிழக அரசு. ஆனால், நவம்பரில் கோரோனா பரவல் அதிகரித்தால் கேரளா எடுத்த முடிவையே தமிழகமும் எடுக்கும் என்று தமிழக தகவல் ஒளிப்பரப்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.