இந்தியா

இந்தியாவில் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

இதன்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது நோபல் பரிசு பெரும் அமைப்பாக உலக உணவு அமைப்பும் திகழ்கிறது. இது மிகப்பெரிய சாதனை என்றும் அந்த அமைப்பிற்கு இந்தியாவின் பங்களிப்பும் இருந்துவருவது மகிழ்ச்சி அடைகிறது. அந்த அமைப்புடன் உறவு வரலாற்று ரீதியிலானது எனவும் தெரிவித்தார்.

எப்ஏஓ எனும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு இன்றுடன் தனது 75-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதனை குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, 75 ரூபாய் மதிப்பாலான சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார். இது இந்த அமைப்புக்கும் இந்தியாவுக்கும் உள்ள நீண்டகால தொடர்பை பேணுவதை குறிப்பது குறிப்பிடதக்கது. இதேவேளை அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.