இந்தியா

கொரோனா நோய்கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்று 90% பலன் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று தாக்கத்தால் உலகம் முழுவதும் சுமார் 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதுடன் கோடிக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர். கடந்தாண்டு இறுதியிலிருந்து இவ்வாண்டு இறுதி வரை தொடர்ந்துவரும் வைரஸ் பாதிப்புக்கு பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் பிஜெர் என்ற மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பையோஎன்டெக் மருந்து நிறுவனமும் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து 90% பலன் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து பல தன்னார்வலர்களிடம் இந்த நிறுவனங்கள் ஆய்வு நடத்தியதில் தேவையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் 130 கோடி டோஸ் மருந்துகள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளன.

வரும் 2021ம் ஆண்டு இறுதிவரை இம்மருந்தை 65 கோடி மக்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை இந்தியாவில் ஆரம்ப தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கோவிட் தடுப்பூசி 90% பலன் என பிஜெர் நிறுவனம் அறிவித்த சிஅல் நிமிடங்களில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1000 ரூபாவுக்கு மேல் சரிவை கண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இந்தியா, இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஸ்ரீநகர் புறநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2016 ஆமாண்டு துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.