இந்தியா

மீண்டும் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என டெல்லி சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டெல்லியில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் 3,235 பேர் அங்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இருந்தபோதும் 7,606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது அவசியமற்றது என டெல்லி சுகாதரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் தொடர்பாக அவர் தெரிவிக்கையில் கொரோனாவின் 3வது அலை தற்போது டெல்லியில் உச்சத்திலிருந்து குறைவடைந்து வருவதாகவும் இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியை பேணுவதையும் பொது இடங்களில் கடைப்பிடிப்பது ஒன்றே தீர்வு என கூறியுள்ளார்.

மேலும் இந்த நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இந்தியா, இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஸ்ரீநகர் புறநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2016 ஆமாண்டு துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.