இந்தியா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு நடந்ததை தொடர்ந்து, அந்த ஆலையை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தது.

எனினும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து விசாரிக்கப்பட்ட வழக்குகளை அடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான்; திட்டவட்டமாக ஆலையை திறப்பதற்கு அனுமதிக்கமுடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.