இந்தியா

இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் 12வது பிரிக்ஸ் மாநாடு காணொளி காட்சிமூலம் நடந்துவருகிறது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றிவருகிறார்.

இதேபோல் சீனா சார்பில் அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கும், ரஷியா சார்பில் அதிபர் விளாடிமிர் புதினும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் முக்கிய பிரச்சினைகளாக கொரோனா தொற்று, பயங்கரவாதத்தை ஒடுக்குவது, சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவை விவாதிக்கப்படுகிறது.

இதனிடையே இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியது :

பயங்கரவாதம்தான் உலகில் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும். முறையான வழியில் இதனை சீர் செய்ய வேண்டும். நடப்பு சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டுவருவதன் மூலம் தீர்வு பெறலாம். இந்தியா பன்முகத்தன்மைக்கு உறுதியான ஆதரவளிக்கும் நாடாகும் என்றார்.

மேலும் பிரிக்ஸின் தலைமையின் போது, இந்தியா பிரிக்ஸ் நாடுகளிடையே டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்கும் என்றார். அதோடு இந்தியாவின் மருந்தியல் துறையின் வலிமை காரணமாக, கோவிட்-லாக் டவுன் காலத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எங்களால் மருந்துகளை வழங்க முடிந்தது, இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறன் மனிதகுலத்திற்கு அதே வழியில் உதவும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.