இந்தியா

இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு ஜோபைடன் தலைமையில் மேலும் விரிவடையும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கேட்வே ஹவுஸ் ஒருங்கிணைந்த இணையக் கருத்தரங்கில் கலந்துகொண்டபின் இத்தகவலை பதிவுசெய்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் துணை அதிபராக ஜோபைடன் இருந்த போதே இந்தியாவுடன் நல்ல நட்புறவில் இருந்தார். ஒபாமா ஆட்சியின்போது அமெரிக்க செனட்டின் வெளியுறவுத் தொடர்புக் குழுவின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதியாக, இருந்தபோதும் ஜோ பைடன், இந்திய - அமெரிக்க உறவின் புதிய மாற்றத்தை எதிர்கொண்ட மிக முக்கிய தருணத்தில் அவர் நம் நாட்டுடன் நல்லுறவிலே இருந்தார். இதனால் இந்திய - அமெரிக்க நல்லுறவை பேணுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறியுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.