இந்தியா

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் கந்தசசஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் இன்று இந்தியாவில் பல முருகன் ஆலயங்களில் நடைபெறுகிறது.

பிரபல்யமான முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடந்தோறும் கந்தசஷ்டி திருவிழாவும் சூரசம்ஹார நிகழ்வும் நடைபெறுவது சிறப்பம்சமாகும். அவ்வகையில் இவ்வாண்டும் கடந்த 15ஆம் திகதி கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

தினமும் அதிகாலை முதல் விஷேச பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

மாலை திருச்செந்தூர் கடற்கரை நுழைவாயிலில் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. இதற்காக சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். முதலில் மாயை, கன்மமுமாக தோற்றி வரும் சூரர்களையும் இறுதியாக ஆணவமே உருவான சூரபத்மனையும் தன் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார், சுவாமி ஜெயந்திநாதர். பின்னர் சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். சேவல் கொடியாகவும் மயில் வாகனமாகவும் முருகப்பெருமானிடம் சேர்ந்துகொள்கின்றன.

இதனையடுத்து நாளை சனிக்கிழமை சுவாமித் திருக்கல்யாணமும் விஷேசமாக இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்றும் நாளையும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பல லட்சம் பக்கதர்கள் சூழ நிகழும் இவ் விழாக்கள் எளிமையாக பக்கதர்கள் பங்கேற்பின்றி இந்த வருடம் நடைபெறுவது குறிப்பிடதக்கது. எனினும் ஆலய கந்தசஷ்டி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலை காணொளி வழியே பக்கதர்கள் இணையத்தில் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 7 ஆம் படைவீடான மருதமலையில் உள்ள புகழ்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும் கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது. சூரசம்ஹார நிகழ்வும் இன்று ஆலயத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளபோதும் பக்கதர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.