இந்தியா

மும்பையில் உள்ள பள்ளிகள் டிசம்பர் 31 வரை மூடப்பட்டே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை வரும் 23ஆம் திகதி திறக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் குறைவடைந்து வருவதையடுத்து சமூக இடைவெளியுடன் சில மாநிலங்கள் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனிடையே நவம்பர் 23ஆம் திகதி குஜராத் மாநிலத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு மாநில அரசு அனுமதி அளித்தது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில் மீண்டும் கொரோனா பரவலின் பாதிப்பு அதிகரிக்கின்றமையால் திறக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முந்தைய உத்தரவு ரத்து செய்யப்படுவதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.