இந்தியா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு மேற்கொண்ட விஜயத்தை அடுத்து அங்கு பல்வேறு நலத்திட்டங்களை ஆரம்பித்துவைத்தார்.

இரண்டு நாட்கள் பயணமாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா சென்னை வந்திருந்தார். தனிவிமானம் மூலம் டெல்லியில் இருந்து இன்று மதியம் வந்திறங்கிய அவரை தமிழக முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் வரவேற்றிருந்தனர்.

இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாலை சென்னை கலைவாணர் அரங்கிற்கு வருகை தந்தார். அங்கு அவர் முதலில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மலர்துவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசுன் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

இந்நிலையில்; திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டையில் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டம், சென்னையில் புதிய மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் நிலை பணிக்கான துவக்கம், அமுல்லைவாயலில் Lube plant அமைக்கும் திட்டம் மற்றும் கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் அடங்குவது குறிப்பிடதக்கது.

இதேவேளை சென்னைக்கு தான் வந்து சேர்ந்தது குறித்து அமித்ஷா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.