இந்தியா

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த வட மாநில விவசாயிகள் ரெயில் மறியல், பேரணி உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை டிராக்டரிலும், நடந்தும் பேரணியாக அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் புறப்பட்டு சென்றுள்ளனர். மத்திய அரசை கண்டித்தும் சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும் அவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் டெல்லி எல்லைப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஆளில்லா விமானம் வழியே போராட்டகாரர்களை கண்காணிக்குன் பணியும் நடைபெற்றது.

எனினும் அரியானாவின் அம்பாலா பகுதியருகே சம்பு எல்லை பகுதியில் திரண்டு வந்த விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்த நிலையில் அவர்கள் மீது தண்ணீர் பாய்ச்சி அடிக்கப்பட்டது. மேலும் பலப் பகுதிகளில் தடுப்பு வேலியும் தடுப்பான்கன்களும் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்புவேலிகளை உடைத்து முன்னேறிச்சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்தப்பட்டது.

இதனால் பிற மாநிலங்களிலிருந்து டெல்லி செல்லும் பயணிகள் பாதிப்படைந்துள்ளதுடன் வட பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும் விவசாயிகள் டெல்லிக்குள் பேரணியை நடத்திச்செல்லவதில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.