மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இப்புயல் கடந்த 25ஆம் திகதி புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்றபோதும் தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்திருந்தது.
தற்போது மீண்டும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் இதனால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் மற்றும் கேரளத்தில் அதிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்