புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.
வங்கடலில் உருவான புரேவி புயல் மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று பாம்பனுக்கு கிழக்கு-தென் கிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவிலும் இப் புயல் நிலை கொண்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி புரேவி புயல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் : தமிழக முதல்வருடன் புரேவி புயல் குறித்து தொலைபேசி மூலம் உரையாடினேன். மாநிலத்தின் சில பகுதிகளில் புரேவி புயல் காரணமாக நிலவும் நிலைமைகள் குறித்து விவாதித்தோம். மேலும் தமிழகத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
இதேவேளை உருவாகியுள்ள புதிய புயலின் தாக்கத்தால் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அவ்வகையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் புரேவி புயலுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு எடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
அதேவேளை இப்புயல் காரணமாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் அருகே ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற 50ற்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் சிக்கித் தவிப்பதாகவும் அவர்களை தேடி மீட்கும் பணி; கடலோர காவல்படையினார் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. முன்னதாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை புதிய புயல் காரணமாக மீனவர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிட தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்