டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 19வது நாளாக தொடர்வது இன்று நெடுஞ்சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் டெல்லி எல்லைப்பகுதிகள் முடங்கி உள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 19வது நாளான இன்று ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலை எண் 8-ஐ ஆக்கிரமிக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
அதேவேளை விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் தீவிர திட்டத்தின் ஒன்றாக போராட்டக்காரர்கள் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் நாடுதழுவிய ஆர்ப்பாட்டத்தையும் காலை 8 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறார்கள்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடதக்கது.