வருடத்தின் இறுதிமாதம் வரை கொரோனா நோய்த்தொற்று பல்வேறு நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கள் 1 கோடியை நெருங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் 22,890 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்தம் 99 லட்சத்து 79 ஆயிரத்து 447 கொரோனா பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 789 ஆக உயர்ந்து உள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை கடந்த 24மணிநேரத்தில் 31 ஆயிரத்து 087 பேராக உள்ளது. இதனால் நாடு முழுவதும் மொத்தம் 95 லட்சத்து 20 ஆயிரத்து 827 பேர் குணமடைந்துள்ளனர்.
எனினும் கொரோனாவால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்