இன்று முதல் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு தினமும் 5 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், ஆலயத்தின் மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களையும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ளவர்களையுமே அனுமதித்தனர்.
இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் தரிதசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது, இதனையடுத்து தினசரி 5 ஆயிரம் பக்தர்களை சபரிமலை ஆலய தரிசனத்திற்கு அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் வரும் பக்தர்கள் 48மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்றிசழ் கொண்டுவரவேண்டும் என்றும் 26-ந் தேதிக்கு பின், அனைத்து பக்தர்களுக்கும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்