இந்தியா

இங்கிலாந்தில் புதியதாக பரவிவரும் கொரோனா தொற்றுநோயை அடுத்து உலக நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.

இது குறித்து வெளியான தகவலில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக அடையாளங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,950 ஆக உள்ளது. இதனால் மொத்தமாக 1,00,99,066 கொரோனா பாதிப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 333பேராக உள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,895 ஆக உயர்ந்து மொத்தம் 96,63,382 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் கொரோனா பரவல் விகிதம் டெல்லியில் 1% சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக டெல்லி சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் டெல்லியில் நாள்தோறும் ஏற்படும் கொரோனா தொற்று விகிதம் குறைந்துவருவதாக தெரிவித்துள்ளதுடன் டெல்லியில் நேற்று மேலும் 939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,18,747 ஆக உள்ளது.

இதேவேளை கொரோனா தடுப்புமருந்தை சேமித்துவைப்பதற்கான அனைத்து முன் ஏற்பாடு பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

அதேவேளை இன்று முதல் ஜனவரி 2ஆம் திகதி வரை கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு 10 முதல் காலை 6மணி வரை ஊடரங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் எனவும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டகப்பட்டுள்ளனர்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.

சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.