இந்தியா

இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம், இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தும் நோக்கத்துடன் மூன்று வேளாண் சட்டங்களை ஆட்சி மன்றங்களின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது.

இவற்றுக்கு எதிராக தொடக்கம் முதலே விவசாயிகள் போராடினாலும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், கொரோனா அச்சறுத்தல் குறையத் தொடங்கியதும் இந்தச் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 25-ம் தேதியிலிருந்து டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த சீக்கிய விவசாயிகள் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. வரலாறு காணாத இப்போராட்டத்தின் வழிமுறைகள் நாளுக்குநாள் விரிவடைந்து வருகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக விவசாயிகள் முன்னெடுத்த பல்வேறு வடிவங்கள் டெல்லியின் சுங்கச் சாவடிகளை கைப்பற்றிய விவசாயிகள், மக்களை சுங்கக் கட்டணமின்றி செல்ல அனுமதித்தனர். கார்பரேட் பெருநிறுவனங்கள் பயன்பெறுவதற்காக இயற்றப்பட்ட இச்சட்டங்களை எதிர்க்கும் அடையாளமாக, இச்சட்டங்களினால் பயன்பெறப்போகும் அம்பானி, அதானி நிறுவனங்களுடனான வணிகத்தைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ரிலையன்ஸ் நிறுவனங்களை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து ஜியோ சிம்களை உடைக்கும் போராட்டத்தை நடத்தினர். முன்னதாக பஞ்சாப் மாநிலத்திலுள்ள ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் பெட்ரோல் பங்களுக்கு எதிராக விவசாயிகள் மறியல் நடத்தியிருந்தனர். தற்போது பஞ்சாபிலுள்ள அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பைத் துண்டிக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பஞ்சாப்பின் நவான்ஷ்ஹார், பெரோஸ்பூர், மன்ஸா, பர்னாலா, பசில்கா, பாட்டியாலா மற்றும் மோகா மாவட்டங்களில் அமைந்துள்ள ஜியோவின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிப்பு தொடர்கிறது. இதுபற்றி கருத்து கூறிய விவசாய சங்கம் ஒன்றின் தலைவர் தர்ஷன் சிங் கர்மா, “பெரோஸ்பூரிலுள்ள ஐந்து ஜியோ தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின்இணைப்பைத் துண்டித்துள்ளோம். (விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களுக்கு காரணமான) கார்ப்பரேட் பெருநிறுவனங்களை எதிர்ப்பதற்காக இப்படியான போராட்டத்தை செய்கிறோம்” என கூறியுள்ளார்.

நவான்ஸ்ஹாரிலுள்ள 11 ஜியோ தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தொலைதொடர்பு கோபுரங்கள் அமைந்துள்ள வளாகமும் விவசாயிகளால் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்இணைப்பு துண்டிப்புக்குள்ளான ஜியோ நெர்ட்வொர்க் செயல்படும் தொலைதொடர்பு கோபுரங்களை பயன்படுத்தும் பிற நெட்வொர்க்குளாலும் பாதிப்படைவதாகக் கூறப்பட்டது.

மேலும் மாணவர்களின் இணையவழிக் கல்வி, தேர்வுகள் இதன் மூலம் பாதிப்புக்குள்ளாவதாகவும் கூறப்பட்டது. இதைக் கருத்தில் எடுத்துக்கொண்ட விவசாயிகள், பிற நெட்வொர்க்குகள் பகிர்ந்து கொள்ளாத ஜியோவின் பிரேத்யேக தொலைதொடர்பு கோபுரங்களைக் கண்டறிந்து அதனை மட்டும் செயலிழக்கச் செய்யப்போவதாக கூறியுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசின் அலட்சியப் போக்கு விவசாயிகளை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஒரு மாதமாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசு உரிய மதிப்பளிக்காததன் விளைவே இவை. இப்படியாக நாளுக்கு நாள் விரிவடையும் விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக மிக விரைவில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்றே ஆக வேண்டிய நிலை வரும்.

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.