இந்தியா

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஆளும் பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆட்சியாக அதிமுகவின் ஆட்சி வருணிக்கப்பட்டு வருகிறது.

இதனால், தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளுக்கு அளிக்கும் பேட்டியில், ‘வேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு? என்று தமிழக முதல்வர் திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பலை எழுந்துள்ளது. உண்மையில் இந்த சட்டங்களால் விவசாயிகள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள்? கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் விவசாய அறிவியலைப் பயின்ற முருகேசன் என்ற பட்டதாரி, பல விவசாய சங்க நிர்வாகிகளோடும், விவசாயத்தின் மீது அக்கறை கொண்ட அறிஞர்கள் பலரோடும், கலந்துரையாடி அளித்த 10 காரணங்கள் இதோ:

1 ) குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு விலகிக் கொள்கிறது. இதனால் நாட்டில் அரசு அமைப்புகள் நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படும்,

2) வருமானத்தை இரட்டிப்பாக்கப் போகிறோம் என்கிற பெயரில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப் பன்னாட்டு பெரு நிறுவனங்களில் நிதிகளை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. அப்படி அனுமதிக்கப்பட்டால் ஒப்பந்த சாகுபடி முறை என்கிற பெயரில் விவசாய விளை நிலங்கள் அபகரிக்கப்படும். மேலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நிலக்கரி, விளைநிலங்களில் குழாய் பதிப்பு, விரைவுச் சாலைகள் போன்ற பேரழிவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இது வழிவகுக்கும்.

3) நீர்நிலைகளைப் பாசன மேம்பாடு என்கிற பெயரில் அணைகள் ஆறுகளில் நீர் ஆதாரங்கள் பராமரிப்பு தனியார் பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படும். அதன் மூலம் நிலத்தடி நீர் உட்பட அனைத்தும் வணிக நோக்கில் சந்தைப்படுத்தப்படும் பேராபத்து ஏற்படும்.

4) இந்தச் சட்டம் சந்தையில் போட்டி போட்டு விற்பனை செய்வதற்கு வாய்ப்பாக ஆன்லைன் டிரேட் என்று சொல்லப்படுகிற யூக பேர வணிகம் அனுமதிக்கப்படுவதால் உள்நாட்டு வணிகர்கள் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள்.

5) தமிழ்நாட்டில் உழவர் சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்துச் சந்தைகளும் கார்ப்பரேட்டுகள் அபகரிக்க வழிவகுக்கும்.

6) இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள மரபணு மாற்று விதைகள் சாகுபடி செய்ய வழிவகுக்கும். இதனால் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களே நஞ்சாகி மருந்தில்லா உயிர்க்கொல்லி நோய்த் தாக்குதலுக்கு மனிதர்கள் ஆளாவார்கள். மண்வளம் மலட்டுத் தன்மை அடையும். இதன் மூலம் ஒட்டுமொத்த விவசாயமும் கேள்விக்குறியாகும்.

7) கூட்டுறவு அமைப்புகள் முடக்கப்பட்டு பெருமுதலாளிகள் கிராமங்கள்தோறும் குறைந்த முதலீட்டில் வங்கிகள் திறந்து கந்துவட்டிக் கொடுமைக்கு விவசாயிகளை அடிமைப்படுத்துவார்கள்.

8) குளிர்சாதனக் கிடங்குகள் உட்பட அனைத்துக் கிடங்குகளும் கார்ப்பரேட்டுகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர். அவ்வாறு கட்டப்படும் மற்றும் தற்போது செயல்பாட்டில் உள்ள கிடங்குகள் முற்றிலும் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.

9) மிகை உற்பத்தி காலத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருட்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கிடங்குகளில் இருப்பு வைத்துக் கொள்வார்கள். தட்டுப்பாடு காலத்தில் நம் இடத்திலேயே பல மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்வதற்கு வழிவகுக்கிறது. இதற்கு உதவியாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்களை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. இதன் மூலம் வர்த்தக சூதாடிகள் உணவுப் பொருட்களைச் சந்தையில் பதுக்கிவைத்து விற்றுக் கொள்ளை லாபம் அடிப்பதற்குச் சட்டப்படி அனுமதி வழங்கப்படுகிறது.

10) மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இதுவரையிலும் வேளாண்துறை செயல்பட்டு வருகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது முதல் மாநில அரசினுடைய அதிகாரம் முற்றிலும் பறிக்கப்படுகிறது.

NOTE: IT TOTALLY AFFECTS CIRCULAR ECONOMY AND SUPPORT VERTICAL ECONOMY. all local governance, identity, culture, customs, deshi seeds will disappear very soon, no one able to eat the food you want to eat.

By Dr.S.Murugesan. - An Agriculture Graduate from Tamil Nadu Agriculture University, Coimbatore.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.