இந்தியா

இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று ஆரம்பமாகியுள்ளது. இதேபோல் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த ஓராண்டாக பரவிவரும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக அவசரகால பயன்பாட்டுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை முதலில் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா மோசமாக உள்ள நாடுகளில் அமெரிக்காவை அடுத்து இந்தியா இருந்துவரும் நிலையில் சில கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. இறுதித்தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் எண்ணிக்கை 2.54 லட்சம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பல நாடுகளில் தற்போது தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருவதையடுத்து இந்தியாவிலும் விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையிலும்; ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்–டி தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஓரிரு நாட்களில் அவசரகால பயன்பாட்டிற்கான கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒப்புதல் கிடைத்தவுடன் முன்கள சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தும் பணி ஆரம்பமாகிவிடும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா செயலி சரியாக செயல்படுகிறதா, தடுப்பூசி வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு துவக்கமாக தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் 17 இடங்களில் ஒத்திகை நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.