இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய சுகாதரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றுவருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை பாரவையிட்டார். இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் டெல்லி மட்டுமல்லாது நாடுமுழுவதும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பு மருந்து குறித்து திட்டமிட்டு பரபரப்படும் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்றும் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் முன்னதாக அவர் கூறியிருந்தார்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்