இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து அதனை போட்டுக்கொள்வதற்கான பல்வேறு கட்டங்களாக ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைவடைந்து வந்தாலும் திரிபடைந்த கொரோனா பாதிப்பும் உயர்ந்துவருகிறது. இந்நிலையில் அங்கே அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு 2 கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளித்தது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து அடுத்த 10 நாட்களில் பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசிகள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான மருந்துகள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்பான ஒத்திகையும் அண்மையில் பல்வேறு மாவட்டங்களில் நடந்திருந்தன.
இதனையடுத்து தடுப்பூசி விநியோகம் செய்யவதற்கான தயார்படுத்தல்களை சில மாநிலங்கள் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் முதல்கட்டமாக புதுவையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 14 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதுடன் அதில் 13 ஆயிரம் பேர் பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடக மாநிலத்திலும் சுகாதரத்துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. 29 ஆயிரம் 451 மையங்களை மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகத்திற்கு அமைத்துள்ளது.
முன்கள சுகாதார பணியாளர்களுக்கு தேவையான போதிய தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய நிபுணர் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்