உலகை அச்சுறுத்தும் கொரோனா கோவிட் -19 வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள் தொகை இந்தியாவில் ஒரு கோடியைத் தாண்டியுள்ளது எனத் தெரிய வருகிறது.
கொரோனா பாதிப்புகள் பல மாநிலங்களில் சீராக குறைந்து வரும் நிலையில், இந்திய அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,587 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும், தேசிய அளவில் குணமடைந்தோர் விகிதம் 96.36 ஆக உயர்வடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உலகில் மிக அதிகமான மீட்பு விகிதம் இது எனவும், இதுவரை இந்தியா முழுவதிலும், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள் தொகை ஒரு கோடியைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.