இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.
முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இடும் பணி, நாடு முழுவதிலுமுள்ள 3,000 மையங்களில் ஆரம்பமாகியது. இந்த மாபெரும் திட்டத்தை பாரதப்பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக்சின்’மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்க, புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்துள்ளன.
இந்தத் தடுப்பூசிகள் இரண்டையும், பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9 ந் திகதி உயர்மட்ட குழுவினருடன் ஆய்வு செய்தார். அதன் பின், ஜனவரி 16ந் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்