வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
இந்தியாவின் குடியரசு தினமான இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்.
ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இறுதியாக 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால் விவசாயிகள் 62வது நாளாக இன்று டெல்லியில் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக டிராக்டர்களில் பிரமாண்ட பேரணியை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முன்னேடுத்துள்ளனர்.
போலீசாரின் தடுப்புகளை உடைத்து டெல்லிக்கு நுழைய டிக்ரி எல்லை வழியாக வர முட்பட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசியும் தடியடியும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது, மேலும் தற்போது டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவரும் விவசாயிகளால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்