இந்திய சீன லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசிய இராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சீன எல்லையில் இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், " எல்லை பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவு முடிவு எட்டப்படவில்லை. ஆயினும் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் இந்தியா எப்போதும் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நமது பாதுகாப்பப் படையினர் தயாராக உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளனர். " எனக் குறிப்பிட்டார்.
நடந்த 9வது சுற்று பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவின்படி, பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து சீனா மற்றும் இந்திய முன்கள வீரர்களின் படை விலக்கல் நேற்று 10-ந் திகதி தொடங்கியதாக சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.