இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத் தலைநகர் சென்னை வருகிறார். காலை 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு, சென்னை நகரப் போக்கு வரத்துக்களில் மாற்றங்கள் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதனால் நாளை காலை முதல் மதியம் வரை முக்கிய வழித்தடங்களின் போக்குவரத்துக்கள் மாற்றம் செய்யப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.