தமிழகத்தில் பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்ற சிவகாசி விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு ஆலைகளில் வெடிவிபத்து நடைபெற்றிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று பயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்தும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இது தொடர்பில், காவல்துறையினர் வழக்குப் பதிந்து , உரிமையாளர் குத்தகைகாரர் உட்பட்ட நபர்கள் சிலரைக் கைது செய்திருக்கும் நிலையில் இன்று மீண்டும் சிவகாசியில் உள்ள காக்கிவாடன் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், . இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் கூறுகின்றன.